வானவில் : கவாஸகி மோட்டார் சைக்கிளுக்கு ரூ.2.50 லட்சம் தள்ளுபடி சலுகை
பிரீமியம் மோட்டார் சைக்கிள் வாங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு கவாஸகி நிறுவனம் அதிகப்பயான தள்ளுபடி சலுகைகளை அள்ளித் தருவதாக அறிவித்துள்ளது.
கவாஸகியின் பிரீமியம் மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி தருவதாக நிறுவன விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் தயாரிப்புகளான நின்ஜா 300, வல்கன் 650, இஸட்650, இஸட் 900, இஸட் 900ஆர்.எஸ், கே.எக்ஸ் 250, மற்றும் கே.எக்ஸ் 450 ஆகிய மோட்டார் சைக்கிளுக்கு தள்ளுபடி சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரொக்க தள்ளுபடியாக ரூ.30 ஆயிரமும் அல்லது அதற்கு இணையான மதிப்புக்கு கூடுதல் உதிரி பாகங்களையும் வாங்கிப் பயனடையலாம்.
இஸட் 900ஆர்.எஸ். மாடலுக்கு அதிகபட்ச சலுகையாக ரூ.2.5 லட்சம் விலை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.15.30 லட்சமாகும். இதேபோல கே.எக்ஸ். 250 (ரூ.7.43 லட்சம்), கே.எக்ஸ். 450 (ரூ.7.79 லட்சம்) ஆகிய மாடலுக்கு ரூ.70 ஆயிரம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள விற்பனையகத்தில் நின்ஜா 1,000, இஸட் 900, வெர்சிஸ் 650, வல்கன் 650 ஆகிய மாடல்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரை மாடலுக்கேற்ப தள்ளுபடி சலுகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதிரி பாகங்களாக பெட்ரோல் டேங்க் பேட், ரேடியேட்டர் கார்டு, என்ஜின் கார்டு, போர்க் புரொடெக்டர், ரைடிங்கியர் உள்ளிட்ட பாகங்கள் அளிக்கப்படும். இந்த சலுகை விற்பனையாளர்கள் அளிப்பவை. இவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தள்ளுபடி சலுகை முழுக்க முழுக்க விற்பனையாளர்கள் நிர்ணயிப்பவை. ஸ்டாக் உள்ளவரை மட்டுமின்றி, சலுகை அளிப்பது விற்பனையாளர்களின் முழுமையான சுதந்திரமாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.