வானவில் : அடுத்தக் கட்ட தொழில்நுட்பத்தில் உருவான ‘ரோகிட் கிளாஸ்’

சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பமான மிகைப்படுத்தப்பட்ட உண்மை (AUGMENTED REALITY) கொண்டு ஒரு புது வகையான கண்ணாடியை உருவாக்கியுள்ளது.

Update: 2019-03-27 11:00 GMT
இந்த கண்ணாடியின் எடை 120 கிராம். இவ்வளவு குறைவான எடையில் இத்தகைய சிறப்பம்சங்களுடன் ஒரு கண்ணாடியை உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை. உலோகக்கலவை கொண்டு தயாரிக்கப்பட்ட இதன் பிரேம்கள் நமது குரல் மற்றும் முகத்தை அடையாளம் கண்டு பிடிக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு சாலையில் செல்லும்போது நாம் போகும் பாதையில் குழப்பம் ஏற்பட்டால் ஜி.பி.எஸ். போல நமக்கு முன்னர் திரையில் எழுத்துக்கள் தோன்றி வழிகாட்டும். இந்த கண்ணாடியில் ஸ்பீக்கர், மைக்ரோ போன் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம். இதனை அணிந்து கொண்டு ஷாப்பிங் செய்வது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். வாங்கும் பொருளின் தன்மை, தரம் ஆகிய விவரங்களை காட்டிவிடும் இந்த ரோகிட் கிளாஸ்.ஸ்மார்ட் உலகத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை கூட்டி செல்கிறது இதன் நிபுணத்துவம்.

மேலும் செய்திகள்