ஓசூர் டைட்டான் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் டைட்டான் கம்பெனி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

Update: 2019-03-26 21:45 GMT
ஓசூர்,

ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் டைட்டான் கம்பெனி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு டைட்டான் துணை தலைவர் ராஜகோபால், ஏ.வி.பி. ஸ்ரீதர், குழு மேலாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகையை வழங்கி பேசினார்கள். அப்போது அவர்கள் பேசும் போது, டைட்டான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் சிறந்து படிக்க கூடிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 31 ஆண்டுகளாக இந்த உதவித்தொகை வழங்கி வருகிறது. அது போலவே இந்த ஆண்டும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். கல்வி உதவித்தொகை, பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள் என பல திட்டங்களை செய்து வருகிறது. இந்த வருடம் 140 மாணவர்களுக்கு ரூ.16.50 லட்சம் உதவித்தொகையாக வழங்கியுள்ளது.

இதில் 69 சதவீதம் பெண்கள், 23 சதவீதம் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் ஆவார்கள். மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற்று பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று பேசினார்கள்.

விழாவில் திலகவதி என்பவர் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் டைட்டான் கல்வி உதவித் தொகை குழு உறுப்பினர்கள் வைரவேல், பாலாஜி, கோபிநாத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்