கொடிக்கம்பங்களை அகற்றியதால் அரசியல் கட்சியினர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடிக்கம்பங்களை அகற்றியதால் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருவாரூர்,
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை உடனே அகற்ற ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. அதன்படி திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. திருத்துறைப்பூண்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு இடையூறாக இருந்த அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும்
அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆலத்தம்பாடி அருகே கரும்பியூர் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான சீனிவாசராவ் சிலை அகற்றப்பட்டது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலத்தம்பாடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒன்றிய துணை செயலாளர் பாலு தலைமை தாங்கினார். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைப்போல கட்டிமேடு எல்லை நாகலடி பகுதியில் இருந்த கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன. இதை கண்டித்து திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் நாகலடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சாலை மறியல் நடைபெற்ற 2 இடங்களுக்கும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், தாசில்தார் ராஜன்பாபு ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைப்போல கோட்டூர் கடைத்தெருவில் உள்ள கொடிக்கம்பங்களை நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானம் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.