தேர்தல் பணியில் ஈடுபடும் 12,318 அதிகாரிகளுக்கு முதல் கட்ட பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12,318 அதிகாரிகளுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் 12,318 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு மணப்பாறை லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதற்கட்ட பயிற்சியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2,218 அலுவலர்கள், ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,250 அலுவலர்கள், திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 993 அலுவலர்கள், திருச்சி மதுரை ரோடு ஹோலி கிராஸ் கல்லூரியில் 1,434 அலுவலர்கள், திருவெறும்பூர் எல்லக்குடி மான்ட்போர்டு மேல்நிலைப்பள்ளியில் 1,090 அலுவலர்கள், லால்குடி நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1,279 அலுவலர்கள், மண்ணச்சநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 949 அலுவலர்கள், தொட்டியம் ஏலூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 1,999 அலுவலர்கள், துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,106 அலுவலர்கள் என மொத்தம் 12,318 அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
சரிபார்ப்பது எப்படி?
தேர்தல் தொடர்பான பயிற்சியில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர்-1, வாக்குப்பதிவு நிலை அலுவலர்-2, வாக்குப்பதிவு நிலை அலுவலர்-3 மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு நிலை அலுவலர்-4 ஆகியோருக்கு வாக்குப்பதிவு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரத்தினை எவ்வாறு பயன்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை கண்டறிந்து உரிய ஆவணங்களை எவ்வாறு சரி பார்ப்பது மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தயார் செய்து ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.