விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதிகாரிகள் கடிதம்

நிலம் கொடுத்த விவசாயிகளிடம் இன்று (திங்கட்கிழமை) மாலை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

Update: 2019-03-24 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர், தண்டலை, கீழக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நிலம் கொடுத்த விவசாயிகளிடம் இன்று (திங்கட்கிழமை) மாலை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாயிகளிடம் விருப்பம் இல்லாததால் அவர்களுடைய வீட்டு சுவர் மற்றும் கதவுகளில் அழைப்பு கடிதம் ஒட்டப்பட்டது. இதனை கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் ஜெயங்கொண்டம் போலீசார் உதவியுடன் ஒட்டினார். 

மேலும் செய்திகள்