செங்குன்றம் போலீஸ் நிலையம் அருகே சுவரில் துளைபோட்டு டாஸ்மாக் கடையில் ரூ.4¾ லட்சம் கொள்ளை மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்றனர்
செங்குன்றம் போலீஸ் நிலையம் அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றம் பஸ் நிலையத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் நடுவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 40) என்பவர் இந்த மதுக்கடையின் மேற்பார்வையாளராகவும், சிவகுமார் (35) விற்பனையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்கள் விற்பனையான ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை பெட்டியில் வைத்து பூட்டினர். பின்னர் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று மதியம் 12 மணி அளவில் விஜயகுமார் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த மது பாட்டில்கள் தரையில் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பக்கம் பார்த்தபோது சுவரில், ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். கடையில் பணம் இருந்த பெட்டியை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மாயமாகி இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணம் இருந்த பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததுடன், விற்பனைக்கு வைத்து இருந்த மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்று விட்டது தெரிந்தது.
இதுபற்றி அருகில் உள்ள செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். உடனடியாக புழல் உதவி கமிஷனர் ரவி, மாதவரம் துணை கமிஷனர் ரவளி பிரியா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
கொள்ளையர்கள் தங்கள் உருவம் பதிவாகாமல் இருக்க கடையின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை திருப்பி வைத்து இருந்ததால் அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகவில்லை.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், ‘ஸ்ரீபா’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் இருந்து திருவள்ளூர் கூட்டு சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.
இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகேயே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 நாட்களில் செங்குன்றத்தில் மூதாட்டியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு, காரில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளை, தற்போது டாஸ்மாக் கடையில் கொள்ளை என தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி மற்றும் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.