மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 10 பேர் கைது ரூ.19 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-24 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற பார்வதி நகர் அன்சர் (வயது 38), அமீர்கான் (31), இலியாஸ் (31), சுதாகர் (36), சுப்பிரமணி (45), பயாஸ் (48) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.பேரிகை போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற அந்த பகுதியை சேர்ந்த நாராயணப்பா (65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 சீட்டுகளும், ரூ.2,510 பறிமுதல் செய்யப்பட்டது.

பேரிகை போலீசார் மாஸ்தி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளியைச் சேர்ந்த முனுசாமி (65) என்பவரை கைது செய்தனர்.

போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற நடராஜ் (28), அண்ணாமலை (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 81 சீட்டுக்களும், ரூ.12 ஆயிரத்து 580 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 90 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்