நகரப்பகுதி முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது.

Update: 2019-03-23 23:00 GMT
புதுச்சேரி,

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு புதுவை மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலையொட்டி புதுவை துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.புதுவையின் பலவேறு பகுதிகளுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். புதுச்சேரி காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 இந்த நிலையில் புதுச்சேரி வடக்குப்பகுதி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் (பெரியகடை), தனசெல்வம் (உருளையன்பேட்டை), அறிவுச்செல்வம் (ஒதியஞ்சாலை) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், முத்துக்குமரன் மற்றும் போலீசார், துணை ராணுவத்தினருடன் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை, புதிய பஸ் நிலையம், மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி வழியாக நகரப்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்