8,132 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்
குமரி மாவட்டத்தில் 8,132 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18–ந் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 1,694 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமானது மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்தது. அதாவது நாகர்கோவில் இந்து கல்லூரி, கோணம் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, கருங்கல் பெத்லகேம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி, தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
இந்த முகாம்கள் மூலம் 8,132 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது எப்படி? என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கருங்கல் பெத்லகேம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகளும் வழங்கினார். முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யாஅரி, உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கிறிஸ்டோபர் ஜெயராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பத்ஹூ முகமது நசீர், தாசில்தார்கள் சுப்பிரமணியன், கோலப்பன், ராஜாசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.