புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட ஒரே நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் அருணாசலம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். 20-ந்தேதி யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று முன்தினம் விழுப்புரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நேற்றைய தினம் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனுதாக்கல் செய்தனர்.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தனது வேட்புமனுவினை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருணிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தென்னூர் பாபு செட்டி தெருவை சேர்ந்த ஷர்மிளா பேகம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சார்பில் மோதிலால் ஆகியோர் தனித்தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.