இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல்

தானே லோக்மான்யாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி விட்டல் உமப் (24) என்ற வாலிபர் கடத்தி மானபங்கம் செய்தார்.

Update: 2019-03-21 23:30 GMT
தானே,

போலீசார்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அகமதுநகர் பகுதியில் வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை, தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் விட்டல் உமப்புக்கு 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்