வானவில் : காரை கண்டுபிடிக்க உதவும் ‘அவெர் கார்’

மேலை நாடுகளை போலவே நம் நாட்டிலும் பெரிய வணிக வளாகங்களில் பார்க்கிங் செய்வதற்கென்று பிரத்தியேகமான இடங்கள் வந்துவிட்டன.

Update: 2019-03-20 08:18 GMT
வண்டியை நிறுத்தி விட்டு தேடுவது சில நேரங்களில் கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்சினையை தீர்க்கவே அவெர் கார் என்ற இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நம் காரினுள் வைத்து விட்டால் போதும். ஒரு சிறிய பாட்டிலின் மூடியை போன்று இருக்கும் இந்த கருவி நமது கார் சாவியையோ, காரையோ கண்டுபிடிக்க செயலி மூலம் உதவுகிறது.

இதை ஒவ்வொரு முறையும் சார்ஜ் செய்யவோ அடிக்கடி பேட்டரி மாற்றவோ தேவையில்லை. வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்றினால் போதுமானது. மிக எளிதாக உபயோகிக்க கூடிய இதன் செயலி காரின் அருகில் வந்தவுடன் தானாகவே இயங்கத் தொடங்கிவிடும். குழப்பி கொள்ளும் வகையில் பலவித பட்டன்கள் ஏதுமின்றி ஒன்டச்சாக செயல்படுகிறது இந்த அவெர் கார் கருவி.

மேலும் செய்திகள்