ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதி

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2019-03-18 22:30 GMT

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானைகள், மான்கள் காட்டு எருமை, காட்டுப்ன்றிகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

மேலும் யானைகள் கூட்டம், கூட்டமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. வனவிலங்குகளுக்காக வனத்துறை சார்பில் வனப்பகுதியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யானைகளுக்கு தென்னை மட்டை உள்ளிட்டவைகள் போடவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஒகேனக்கல் வனப்பகுதியில் அஞ்செட்டி, பிலிகுண்டுலு பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை அவ்வப்போது சாலையின் நடுவே நிற்பதும் வாகங்களை விரட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. நேற்று காலை ஒகேனக்கல் அருகே முண்டச்சிப்பள்ளம் பகுதியில் ஒற்றை யானை வெளியேறி சாலையை கடந்து சென்றதால் இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்