தூத்துக்குடி தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நாளை வருகை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நாளை (செவ்வாய்க்கிழமை) வர உள்ளார் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நாளை (செவ்வாய்க்கிழமை) வர உள்ளார் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. பழங்குடியினர், சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகள், இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் செலவின பார்வையாளர் நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது.
பொது தேர்தல் பார்வையாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிவின் போது, 24, 25-ந் தேதி வர உள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அதற்கு உரிய குழு ஆய்வு செய்து பணத்தை திருப்பி தருவார்கள்.
பொதுமக்கள் சி-விஜில் அப்ளிகேசனில் புகார்களை தெரிவிக்கலாம். வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.