ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை– ரூ.50 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருவிடைமருதூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை– ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-16 22:15 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள முத்துபிள்ளைமண்டபம் பிரசாந்தி நகரை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன்(வயது65). இவர் மருத்துவ புள்ளியியல் துறை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விஜயா. இவர்களது மகள் வேங்கடமணி.

நேற்று கும்பகோணத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மகளுடன் லெட்சுமி காந்தன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

மாலை இவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த லெட்சுமி காந்தன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ஒரு ஜோடி வைரத்தோடு மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து லெட்சுமிகாந்தன், நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை– பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்