கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் - சமூக வலைத்தளத்தில் நாராயணசாமி கருத்து

கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சமூக வலைத்தளத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-03-14 23:30 GMT
புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளமான தனது டுவிட்டரில், ‘உலகில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் வாக்களிக்கக்கூடிய வாய்ப்பு இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய வாக்கை செலுத்த வேண்டியது அவரவர் கடமை. அப்போது தான் பொதுமக்களின் தேவைகளும் பூர்த்தியாகும்’ என பதிவிட்டுள்ளார்.

அவரது கருத்தினை பிரதமர் மோடி டேக் செய்துள்ளார். பலரும் அதில் தங்களுடைய கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, கிரண் பெடியின் டுவிட்டரை பதிவு செய்து, அதன் மீதான தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரதமர் மற்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து புரிந்து கொள்ளுங்கள். அரசியலமைப்பு வழங்கிய கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாதீர்கள். கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார். இந்த விதிமீறல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்