வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த கிணறு கடலூர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட உள்ளதாக கூறி, அரங்கூர் பொதுமக்கள் நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறு உள்ளதாகவும், மீண்டும் 3-வது முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.