தர்மபுரி மாவட்டத்தில் 116 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் மலர்விழி பேட்டி
தர்மபுரி மாவட்டத்தில் 116 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்த கல்லூரியில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவன்அருள், அரூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் கலெக்டர் மலர்விழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் இதுவரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது செட்டிக்கரை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திற்கு வாக்கு எண்ணிக்கை மையம் மாற்றப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது 3 வாகனங்கள் மற்றும் 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெறும் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது தனிநபர் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு 15 பறக்கும் படை குழுக்கள், 15 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள், 10 நன்னடத்தை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.
தேர்தல் விதிமீறலை பொதுமக்கள் கண்காணித்து உடனுக்குடன் தெரிவிக்க ‘சி.விஜில் ஆப்‘ நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை அனுப்பலாம். இவ்வாறு பெறப்படும் புகார்கள் குறித்து கண்காணிப்பு குழு மூலம் விசாரணை நடத்தப்படும். புகார்களில் உண்மை இருந்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக்குழுவினர் இந்த ஆப் மூலம் நடத்தும் ஆய்வு குறித்த தகவல் தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும். ஆய்வு குழு அளிக்கும் விசாரணை தொடர்பான அறிக்கை திருப்திகரமாக இல்லாவிட்டால் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்படும்.
இந்த செயல்முறை முழுவதும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 116 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக தர்மபுரியில் 13 வாக்குச்சாவடிகளும், பாலக்கோட்டில் 2 வாக்குச்சாவடிகளும், பென்னாகரத்தில் 9 வாக்குச்சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் தலா 46 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை ஆகும்.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.