தண்டவாளத்தின் குறுக்கே ‘பெஞ்ச்’ கிடந்ததால் பரபரப்பு மர்மஆசாமிக்கு வலைவீச்சு
மாகிம் - பாந்திரா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் குறுக்கே பெஞ்ச் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை போட்டு சென்ற மர்மஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மாகிம் - பாந்திரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு தண்டவாளத்தின் குறுக்கே சம்பவத்தன்று பெஞ்ச் ஒன்று கிடந்தது. அங்கு ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார் இதை கவனித்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெஞ்சை அப்புறப்படுத்தினார்கள். யாரோ மர்ம ஆசாமி அந்த பெஞ்சை தண்டவாளத்தின் குறுக்கே போட்டு சென்றது தெரியவந்தது.
அந்த ஆசாமியை பிடிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தண்டவாளத்தின் குறுக்கே பெஞ்ச் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘யாராவது திருட்டு ஆசாமிகள் அந்த பெஞ்சை திருடி கொண்டு தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்திருக்கலாம். அப்போது, ரெயில் வருவதை கவனித்து உயிரை காப்பாற்றி கொள்ள அந்த பெஞ்சை தண்டவாளத்தில் போட்டு விட்டு ஓடியிருக்கலாம்.
நல்ல வேளையாக பெஞ்ச் கிடந்த தண்டவாளம் வழியாக ரெயில் ஏதும் வரவில்லை. இல்லையெனில் விபத்து ஏற்பட்டு இருக்க கூடும்’’ என்றார்.
தண்டவாளத்தில் பெஞ்சை போட்டு சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.