திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-03-10 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பெரியார் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் (வயது 22). டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் விக்னேஷ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனடியாக மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்