பேராவூரணி நீலகண்டபுரத்தில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பேராவூரணி நீலகண்டபுரத்தில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணியைவிரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே நீலகண்டபுரத்தில் ரெயில்வே கேட் இருந்தது. கழனிவாசல், கொரட்டூர், சோழகனார்வயல் என்பன உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட்டை தங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் ரெயில்வே கேட்டை மூடக்கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. பல்வேறு போராட்டங்களும் நடந்தன.
இதையடுத்து போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் ரெயில்வே கேட்டுக்கு பதிலாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் தொடங்கின. ஆனால் இதுவரை பணிகள் முடிவடையவில்லை.
இதனால் கிராம மக்கள் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மாற்று பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து பேராவூரணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகளுக்காக பேராவூரணி நீலகண்டபுரம் ரெயில்வே கேட் மூடப்பட்டு, கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் நடப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகளை பல மாதங்களாக இழுத்தடித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களுள் ஒன்றாக நீலகண்டபுரம் நீலகண்ட பிள்ளையார் கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தேரோட்டம் நடக்கும்போது ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி வழியாக தான் தேர் வலம் வரும்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) திருவிழா நடைபெற உள்ள நிலையில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடையாமல் இருப்பதால் தேரோட்டத்துக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.
இப்பகுதியில் போக்குவரத்து துரிதமாக நடைபெறுவதற்கு வசதியாக கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.