திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 390 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 390 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திருச்சி,
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 10–ந்தேதி 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் வளர்மதி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1,279 மையங்கள், மாநகராட்சி பகுதியில் 290 மையங்கள், துறையூர் நகராட்சி பகுதியில் 20 மையங்கள், மணப்பாறை நகராட்சி பகுதியில் 23 மையங்கள் என சொட்டு மருந்து வழங்குவதற்காக மொத்தம் 1,569 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது தவிர ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாத்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 390 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.