தஞ்சை மாநகராட்சியில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 70 மையங்களில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2019-03-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் 70 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரெயில் நிலையம், பெரியகோவில் பகுதியிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் 21 பள்ளிகள், 15 சத்துணவு மையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 70 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. 2 நடமாடும் குழு மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


இந்த பணியில் 425 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மாலை 5 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் உள்புறம் மற்றும் வெளிப்புறம், பெரியகோவில், ரெயில் நிலையம் ஆகிய 6 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தஞ்சை மாநகராடச் பகுதியில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

தஞ்சை அரசு ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்