விதிகளை மீறிய 8 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
விதிகளை மீறிய 8 ஆம்னி பஸ்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உத்தமபாளையம்,
கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் பயணிகளை தவிர விதிகளை மீறிய அதிகளவில் பொருட் களை (லக்கேஜ்) ஏற்றி செல்வதாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான போக்குவரத்து அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு கம்பத்தில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்களை உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் நிறுத்தி திடீரென சோதனை செய்தனர்.
இதில் பஸ்களில் பயணிகளை தவிர பொருட்களை அதிகளவில் பாரம் ஏற்றி சென்ற 8 ஆம்னி பஸ்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ‘பயணிகள் பயணம் செய்யும் ஆம்னி பஸ்களில் கூடுதல் பாரம் ஏற்றுவது போக்குவரத்து சட்டப்படி குற்றமாகும். அதன்படி முதற்கட்ட சோதனையில் 8 ஆம்னி பஸ்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் தொடரும்.
மேலும் கூடுதல் பொருட் களை ஏற்றி செல்வது குறித்து பொதுமக்கள் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.