கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள காகித தணிக்கை எந்திரம் ஆய்வு
சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தும் பொருட்டு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரத்தின் முதற்கட்ட சரிபார்க்கும் பணியானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019–ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தும் பொருட்டு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரத்தின் முதற்கட்ட சரிபார்க்கும் பணியானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உரிய பாதுகாப்போடு வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது அரியலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 5 பொறியாளர்கள் மேற்கொண்டனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வினை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.