பி.டி.டி. சால் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு மும்பையில் 2 ஆயிரம் மலிவு விலை வீடுகள் மகாடா பட்ஜெட்டில் அறிவிப்பு
மகாடா பட்ஜெட்டில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மகாடா பட்ஜெட்டில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பி.டி.டி. சால் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல்
மராட்டிய மாநில வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடாவின் மும்பை வாரிய பட்ஜெட் ரூ.2 ஆயிரத்து 221 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது ரூ.304 கோடி பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.
இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்து உள்ளார்.
மலிவு விலை வீடுகள்
மும்பையில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோரேகாவ் மோதிலால் நகரில் குறைந்த, நடுத்தர, உயர்தர வருமானம் கொண்டவர்களுக்காக 18 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அங்குள்ள 3,700 பேருக்கு சீரமைப்பு திட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.
பி.டி.டி. சால் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் கட்டிட பழுதுபார்ப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.