சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவிலில் 3,321 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி பயிர்க்காப்பீட்டு தொகை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவிலில் 3,321 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி பயிர்க்காப்பீட்டு தொகையை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்.
சீர்காழி,
சீர்காழி அருகே நிம்மேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி தலைவர் ரீமா ராஜ்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர்ரவி, கொளஞ்சி, முன்னாள் தலைவர்கள் அமுதா சுகுமாறன், திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் சக்தி வரவேற்றார்.
இதில் பாரதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 640 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் வங்கி செயலாளர் தியாகராஜன், வங்கி துணை தலைவர்கள் ராஜதுரை, முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி தலைவர் ரவி தலைமை தாங்கினார். பால் கூட்டுறவு சங்க தலைவர் அஞ்சம்மாள், துணை தலைவர் பார்த்தசாரதி, கூட்டுறவு சங்க நிர்வாகி ரவிசந்திரன், துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் தேவதாஸ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாரதி எம்.எல்.ஏ., 2 ஆயிரத்து 681 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் செல்லையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.