ஆரணியில் ரூ.2½ கோடியில் நவீன காய்கறி மார்க்கெட் அமைக்க பூமி பூஜை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

ஆரணியில் ரூ.2½ கோடியில் நவீன காய்கறி மார்க்கெட் வளாகம் அமைக்க பூமிபூஜையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-08 22:30 GMT

ஆரணி,

கடந்த ஆகஸ்டு மாதம் ஆரணி காய்கறி மார்க்கெட்டில் சில கடைகள் இடிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதமும் சில கடைகள் இடிந்து விழுந்தன.

பின்னர் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் மக்கள்நலன் கருதி மார்க்கெட் வளாகம் முழுவதையும் இடிக்க முடிவு செய்தனர். தற்போது நகராட்சி வளாகத்திலேயே தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அமைச்சரின் தனிகவனத்துடன் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பரிந்துரையின் பேரில் ஆரணி காந்தி ரோட்டில் பழைய மார்க்கெட் வளாகத்திலேயே புதிதாக நவீன காய்கறி மார்க்கெட் வளாகம் அமைக்க ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக்பாஷா, செயலாளர் பி.மோகன், பொருளாளர் சங்கர்கணேஷ், தமிழ்நாடு வணிகர் பேரவை மாவட்ட தலைவர் எல்.குமார், நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் அசோக்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எஸ்.ஜோதிலிங்கம், பி.ஜி.பாபு, கூட்டுறவு வங்கி துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், குமரன், மகளிரணி நிர்வாகி கலைவாணி, கூட்டுறவாளர்கள், பல்வேறு வியாபார சங்க நிர்வாகிகள், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் ஆறுமுகம், உஷாராணிசங்கர், திரிலோகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி பொறியாளர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்