திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன், மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு மாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து காலை, மாலைகளில் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. 18-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவப்பூர் முத்துமாரியம்மன் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.
இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.