தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டகங்கள் அமைச்சர் வழங்கினார்

தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டகங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2019-03-07 23:00 GMT
ஆரணி, 

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., வட்டார மருத்துவ அலுவலர் வளர்செல்வி, உதவி கலெக்டர் இல.மைதிலி, டாக்டர்கள் சந்தியா, வெற்றிசெல்வன், மாலினி, சக்திஜனனி, பிரியங்கா, மோனிகாதீபக், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு சுகாதார துணை இயக்குனர் வி.கோவிந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டகங்களை வழங்கி பேசினார்.

முன்னதாக ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் திருவண்ணாமலை மண்டலத்திற்கு புதிதாக அரசு 30 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 12 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை மண்டல பொது மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர் (வணிகம்) கே.செல்வகுமார், ஆரணி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி பணிமனை மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, ஆரணி - சென்னை பஸ்களையும், காஞ்சீபுரம் - ஆரணி வழியாக சேலம், ஆரணி - பெங்களூரு, செய்யாறு - ஆரணி வழியாக பெங்களூரு, திருவண்ணாமலை -கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார்.

விழாவில் அரசு வக்கீல் கே.சங்கர், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கோவிந்தராசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, அசோக்குமார், பி.ஜி.பாபு, எஸ்.ஜோதிலிங்கம், சேவூர் ஜெ.சம்பத், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் உள்பட அரசு அலுவலர்கள், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்