திருமணமான மறுநாளில் வாலிபர் தற்கொலை ரெயில்முன் பாய்ந்து உயிரை மாய்த்தார்

திருமணமானமறுநாளிலேயே ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-06 23:05 GMT
அவுரங்காபாத்,

திருமணமானமறுநாளிலேயே ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் தற்கொலை

அவுரங்காபாத் பிரிஜ்வாடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஜீவன் போசலே(வயது 28). இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியில் சென்றார். வெகுநேரமாகியும் ஜீவன் போசலே வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை தீவிரமாக தேடி அலைந்தனர். இந்தநிலையில் அவரது மோட்டார் சைக்கிள் முகுந்த்வாடி ரெயில்நிலையம் அருகே கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கு சென்று அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான மறுநாளிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்