2 நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
2 நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 4-ம் கட்டமாக கூடுதலாக 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரியலூர் தாலுகாவில் கரைவெட்டி கிராமத்திலும், செந்துறை தாலுகாவில் குழுமூர் கிராமத்திலும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. விவசாய பெருமக்கள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.