தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

தலைமை ஆசிரியரை தாக்கியது தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-06 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொட்டையூரில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி இந்த பள்ளியின் வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் தட்டிக்கேட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மனோகரன், கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே தலைமை ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மேலக்காவிரி வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராம்கி (வயது27) என்பவரை நேற்று முன் தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்