திருச்சி தென்னூரில் டாஸ்மாக் கடையில் தீ விபத்து; ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசம்
திருச்சி தென்னூரில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாயின.
திருச்சி,
திருச்சி மாநகரில் 70-க்கும் மேற்பட்ட அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடை இரவு 10 மணிவரை தொடர்ந்து செயல்படும். 10 மணிக்கு மேல் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.
மேலும் ஒவ்வொரு நாளும் விற்பனையான தொகையை மறுநாள் காலை 10 மணிக்கு மேல்தான் வங்கியில் செலுத்துவது வழக்கம். சில கடைகளில் வசூல் ஆன தொகையை இரவிலேயே கடையின் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்றுவிட்டு மறுநாள் வங்கியில் செலுத்தி வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை குறிவைத்து கொள்ளை கும்பல் அவர்களை தாக்கிவிட்டு பணத்தை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் தர்மபுரியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனையான பணத்தை மேற்பார்வையாளர் எடுத்து சென்றபோது, கொள்ளை கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் விட்டு பணத்தை பறித்து சென்றது.
இந்த அச்சம் காரணமாக, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனையான பணத்தை கடையிலேயே இரவு வைத்து விட்டு, மறுநாள் கடை திறந்ததும் வங்கியில் செலுத்த எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திலும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலையில் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்: 10251) ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்கள் விற்பனையான பணத்தை, அந்த கடைக்குள்ளேயே விற்பனையாளர்கள் வைத்து பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு, பூட்டப்பட்ட அந்த மதுக்கடையில் இருந்து தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் லியோ ஜோசப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மதுக்கடை ஷட்டரை உடைத்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தினாலும், தீயின் வெப்பத்தினாலும் மதுபாட்டில்கள் ‘டமார், டமார்’ என வெடித்து சிதறிக்கிடந்தன. கடையினுள் உள்ள மின்சார பெட்டி, சுவிட்ச் போர்டுகள் தீயில் கருகி இருந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த 200 ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின. ரூ.2 லட்சம் தீயில் எரியாமல் மீட்கப்பட்டன. தீ விபத்தில் நாசமான மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக வந்து துரித நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.