மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வை 4,488 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று குரூப்-1 தேர்வை 20 மையங்களில் 4,488 பேர் எழுதினர்.

Update: 2019-03-03 22:00 GMT
நாமக்கல், 

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையிலான காலிப்பணியிடங்களுக்கு நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 5 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் 20 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நாமக்கல் நகரில் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் 4,488 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தவர்களில் 1,466 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு செய்தனர்.

அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு நடவடிக்கைகள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்