பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா மேல்மருவத்தூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2019-03-03 21:45 GMT
மதுராந்தகம்,

கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தொடங்கிய விழாவில் கலசவிளக்கு வேள்விபூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை பங்காரு அடிகளார் தன் பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கினார். பின்னர் சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கே வைக்கப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை குழந்தைகளுக்கு அவர் வழங்கினார். ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் கோ.ப.அன்்பழகன், கோ.ப.செந்தில் குமார், ஸ்ரீதேவிரமேஷ், டாக்டர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

தொல்லியல் துறை ஓய்வு பெற்ற துணை இயக்குனர் சுந்தரமூர்த்தி எழுதிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடமும் சுற்றியுள்ள சிவசக்தி தலங்களும் என்ற புத்தகத்தை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தணிகாசலம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விழாவையொட்டி 1,712 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

மேலும் செய்திகள்