வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தல்

வணிக நிறுவனங்களின், பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும், அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திட வேண்டும்.

Update: 2019-03-02 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற் சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின், பெயர் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும், அதற் கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திட வேண்டும். மேலும் எழுத்துக்களின் அளவு தமிழ், ஆங்கிலம், பிறமொழி ஆகியவை முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நேர்வில் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு பெயர்பலகைகளை அமைத்திடுவதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையினை செயல் படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு, நீதிமன்ற ஆணைகளின் படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை வணிக நிறுவனங்களின் பெயர் பலகை களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர் கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர் பலகை அமைத்திடாத நிறு வனங்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும். எனவே, தமிழ் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி, வணிகர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக உடனடியாக பெயர் பலகைகளை தமிழில் அமைத் திடுவதற்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்