தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
நாகூர் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகூர்,
நாகூரை அடுத்த ஒக்கூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினர் மாற்று வேலை தருவதாக கூறப்படுகிறது. ஆனால் மின் உற்பத்தி நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இதனை கண்டித்து கடந்த மாதம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்வேளூர் தாசில்தார் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் செய்த வேலையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், தொழிலாளர்களுக்கு சுை-தூக்கும் பணியை இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஓக்கூர் மின் உற்பத்தி நிலைய நுழைவு வாயில் முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தனி தாசில்தார் அமுதவிஜயரங்கன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 6-ந் தேதி மின் உற்பத்தி நிலைய உரிமையாளர், உயர் அதிகாரிகளை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.