தூத்துக்குடி, திருச்செந்தூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, திருச்செந்தூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 21:45 GMT
தூத்துக்குடி,

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி அதை கண்டித்து பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று தூத்துக்குடியில் உள்ள அந்த நிறுவனத்தின் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் முருகபெருமாள் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், என்.எப்.டி.இ. சங்க மாவட்ட செயலாளர் பாலகண்ணன், ஏ.ஐ.பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சொர்ணராஜ் நன்றி கூறினார்.

இதேபோல், திருச்செந்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் அஸ்ரப், பாஸ்கர், கோயில்மணி, சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்