மானாமதுரை அருகே மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் தொடங்க முயற்சி கிராம மக்கள் எதிர்ப்பு
மானாமதுரை அருகே மூடப்பட்ட அரசு மணல் குவாரியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல்குவாரி தொடங்கப்பட்டு, 6 மாதங்கள் மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மணல்குவாரி தொடங்கியதற்கு மானாமதுரை, சூடியூர் மற்றும் தெ.புதுக்கோட்டை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் சூடியூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மணல் குவாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் நிபுணர்கள் உள்ளிட்ட குழுவை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பியது. தொடர்ந்து சூடியூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அதன் பின்பு ஒரு மாதம் மட்டுமே இயங்கிய நிலையில் மணல் குவாரி மூடப்பட்டது.
தற்போது இந்த மணல்குவாரியை மீண்டும் தொடங்க முடிவு செய்து, அதற்கான பணிகள் நடந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு சூடியூர் கிராம மக்கள் சார்பில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது, சூடியூரை சுற்றி 300 ஏக்கர் நிலத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. முன்பு மூன்று போகம் விளைந்த இந்த பூமி தற்போது வறட்சியாக காணப்படுகிறது.
தற்போது குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இந்த வேளையில் அரசு மணல் குவாரி தொடங்கினால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். எனவே மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றனர்.