டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-02-28 21:30 GMT
சங்கரன்கோவில், 

டாஸ்மாக் கடை

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு சார்பில் புதிய டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடை அமைய இருக்கும் பகுதியில் 100 மீட்டர் சுற்றளவில் கோவில், பள்ளிக்கூடம், விவசாய நிலங்கள் உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்