திருமணத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார்: வாலிபர் தற்கொலை வழக்கில் பெண் கைது

வாலிபர் தற்கொலை வழக்கில், திருமணத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-27 23:00 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் கோவில் ஊரணி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 32). இவர் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே பூக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பாலமுருகனின் தாயார் மீனாள் தேவகோட்டை டவுண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் தனது வீட்டின் அருகே வசிக்கும் மஞ்சுளா(வயது 43) என்பவர், எனது மகனுக்கு வரம் தேடும் பெண்கள் வீட்டில் ஏதாவது கூறி திருமணத்துக்கு தடை ஏற்படுத்தி வந்ததார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு எனது மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்