பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி

பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2019-02-26 22:30 GMT
சுந்தரக்கோட்டை, 

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் வகையில் பிரதமமந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்திற்கான நிதி வழங்கும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் பால்துரை தலைமை தாங்கினார். கர்ணாவூர், சவளக்காரன், ராமாபுரம், பருத்திக்கோட்டை, திருப்பாலக்குடி, மகாதேவபட்டிணம், சுந்தரகோட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு முதல் தவணைக்காக நிதி ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி, மன்னார்குடி தாசில்தார் லட்சுமி பிரபா, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன், திருநாவுக்கரசு, அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்