திசையன்விளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை செல்போனில் அடிக்கடி பேசியதை தந்தை கண்டித்ததால் சோக முடிவு

அடிக்கடி செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-25 22:15 GMT
திசையன்விளை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் வாசுகி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.காம் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதனை ராஜேந்திரன் கண்டித்தாராம். இதில் மனமுடைந்த அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குருகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அந்த வீட்டில் தங்கியிருந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. செல்போனில் அடிக்கடி பேசுவதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்