வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் குளறுபடி இல்ல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் எந்த குளறுபடியும் இல்லை என்று பழனியில் நடந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
பழனி,
பழனி நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் லாரிகளில் எடுக்கப்பட்டு பின்னர் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துப்புரவு பணியாளர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து, சரக்குவேன் மூலம் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லவும் நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தூய்மை இந்தியா-திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் ஒதுக்கப்பட்டு, 20 பேட்டரி வண்டிகள், 5 சரக்கு வேன்கள் வாங்கப்பட்டது. மேலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஓர் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கி 81 துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று பழனி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், நகராட்சி ஆணையர் நாராயணன், பழனி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகானந்தம், ஆவின் தலைவர் ஏ.டி.செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் கொடியசைத்து பேட்டரி, சரக்கு வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக் கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் முதல்-அமைச்சர் அறிவித்த வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்துவற்கு அ.தி.மு.க. பயப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தி.மு.க. நடத்தும் நாடகம் என்றார்.
மேலும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்திருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் பதில் அளிக்க மறுத்து சென்றுவிட்டார்.