குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்
மணல்மேடு அருகே குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு,
மணல்மேடு அருகே முடிகண்டநல்லூரில் மணல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு மணல் எடுக்க மாட்டுவண்டிகளுக்கு தற்போது அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் லாரிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள், மாடு மற்றும் வண்டிகளுடன் மணல்மேட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் கடந்த 19-ந் தேதி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முடிகண்டநல்லூர் குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு எம்.எல்.ஏ. கூறினார். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள், மணல்மேட்டில் உள்ள ஒரு திடலில் 2 நாட்களாக நிறுத்தி வைத்து இருந்த மாட்டுவண்டிகளை எடுத்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி முடிகண்டநல்லூர் குவாரியில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கும் வரை மற்ற வாகனங்களை மணல் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறி மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் முடிகண்டநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முடிகண்டநல்லூர் குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதித்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் குவாரிக்கு சென்ற லாரியை மணல் எடுக்கவிடாமல் மறித்து, குவாரியில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற காரணத்திற்காக சக்கரவர்த்தி, இமானுவேல், செங்குட்டுவன், வேல்முருகன், கணேசன், ராஜமூர்த்தி, கண்ணதாசன், ரவிச்சந்திரன், அகோரம், மகேஸ்வரன் உள்ளிட்டோர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்கரவர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை அறிந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தங்களது மாட்டுவண்டிகளை மணல்மேடு கடைவீதியில் நிறுத்தி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் 30-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்றனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து தடை பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மணல்மேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.