விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் பெற 3 நாட்கள் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெற 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரி வித்துள்ளார்.
திருவண்ணாமலை,
பிரதமரின் ‘கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாய குடும்பங் களுக்கு எதிர்பார்த்த மகசூல் பெறும் நோக்கத்திற்காக, வேளாண் இடுபொருள், முறை யான பயிர் வளர்ச்சி ஆகிய வற்றுக்காக ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத் தினை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக தாலுகா, பிர்கா மற்றும் கிராம வாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டு, இத்திட்டத்தின் கீழ் தகுதியான சிறு, குறு விவ சாயிகள் விவரம் கணக்கிடப் பட்டு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இதையடுத்து விவசாயிகள் பலர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க தொடங்கினர். கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் குவிந்தனர்.
கடந்த 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. பலர் விண்ணப்பங்களை வழங்கினர். ஆனால் பல விவசாயிகள் விண்ணப்பிக்க தவறினர். இத்திட்டத்தின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை வழங்க தேவை யான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று (ஞாயிற்றுக் கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
விண்ணப்பிக்க தவறிய தகுதியுடைய விவசாயிகளிடம் இருந்து நாளை (திங்கட் கிழமை), 26-ந்தேதி, 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் திருவண்ணா மலை மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
எனவே மேற்கண்ட தினங் களில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலு வலகம், உதவி கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் விண்ணப் பங்களை சமர்ப்பித்து பய னடையலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.