புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்

புயலால் பாதிக்கப்பட்ட அரக்கரை அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

Update: 2019-02-21 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி தாலுகா கொக்கலாடி ஊராட்சிக்கு உட்பட்ட அரக்கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கஜா புயலால் பாதிக்கப்பட்டது. கொக்கலாடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா அந்த கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு தேவையான எழுதுப்பொருட்கள், பீரோ, நாற்காலிகள், மின்விசிறி, குடிநீர் குடம் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

கொக்கலாடி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன், கிராம மக்கள் இந்த பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று, வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் முன்னிலையில், தலைமையாசிரியர் மரியதெராசாவிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி அமராவதி, கிராம மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்