சாணார்பாளையம் அருகே திருப்பதி முனியப்பன் கோவில் திருவிழா

சாணார்பாளையம் அருகே, திருப்பதி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-02-18 22:45 GMT
பரமத்திவேலூர், 

பரமத்தி வேலூர் தாலுகா சேளூர்- சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 அடி உயர திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் முத்து கருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 222 கிடாக்கள் பலியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் நேற்று காலை 9 மணிக்கு மறு அபிஷேகமும், தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர்- சாணார்பாளையம் திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்